வெற்றி துரைசாமியின் இறுதிசடங்குகள்... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!
சென்னை மாநகரின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், இயக்குநருமான வெற்றி துரைசாமியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இறுதிச்சடங்கில் நடிகர் அஜித் குமார் நேரில் சென்று தனது நண்பருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். நடிகர் அஜித் குமார் நேரில் அஞ்சலி செலுத்த சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.
இதனையடுத்து சென்னையில் வெற்றி துரைசாமியின் உடல் இன்று மாலை 5 மணியளவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஆறு மணியளவில் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட இருக்கிறது.
அரசியல் தலைவர்கள் பலரும் இவரது மறைவுக்கு தங்களது அஞ்சலியை செலுத்தி வரும் நிலையில், தனது நண்பரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் அஜித் நேரில் வந்துள்ளார். இந்த வீடியோ இப்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. மேலும், ’வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களுக்காகவும், சிறந்த சாகசங்களுக்காகவும்’ என்ற கேப்ஷனுடன் வெற்றி துரைசாமி முன்பு அஜித்துடன் எடுத்தப் புகைப்படமும் இணையத்தில் வைரலாகியுள்ளது.