undefined

69 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் அதிரடி நீக்கம்.. உடனே செக் பண்ணுங்க... !

 

தகவல் பரிமாற்ற செயலிகளில் கோடிக்கணக்கான பயனர்களை பெற்று உலக அளவில் முண்ணனி ஆப்பாக செயல்பட்டு வருவது வாட்ஸ் அப் நிறுவனம். பயனர்கள் தேவை, வசதி,தொழில் நுப்ட மேம்பாடு இவைகளின் அடிப்படையில் வாட்ஸ் அப் நிறுவனம் அடுத்தடுத்து அப்டேட் செய்து வருகிறது. அந்த வகையில்  பல்வேறு அப்டேட்டுகளை கொடுத்துக் கொண்டிருக்கும் வாட்ஸ்அப் நிறுவனம் திடீரென 69 லட்சம் கணக்குகளை அதிரடியாக நீக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  


மோசமான கணக்குகள் என்கிற அடிப்படையில் 69 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.   
 சமீபத்தில்  வாட்ஸ்அப் தீம்களை விரும்பிய நேரத்தில் மாற்றம் செய்து கொள்வது முதல்  விரும்பிய ஒருவரின் சாட்டை லாக் செய்து கொள்ளும் வசதி வரைக்கும் சூப்பர்  அப்டேட்டுகள் கொடுத்தது பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.   


 அதேநேரத்தில், வாட்ஸ்அப் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அவர்களின் whatsapp கணக்குகள் மொத்தமாக முடக்கம் செய்யப்பட்டும் வருகிறது.   அதாவது, வாட்ஸ் அப் செயலியின் மூலமாக தவறான கருத்துக்களை பகிர்வது, பிற பயனர்களுக்கு தொல்லை கொடுப்பது உட்பட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் whatsapp கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது.    அதன்படி   ஐடி விதிகள் 2021 ன் படி 69 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ் அப் கணக்குகள் பல்வேறு மோசமான புகார்களின்  அடிப்படையில் தடை செய்யப்பட்டு இருப்பதாக   வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.