undefined

வேறு ஒருவருடன் பழக்கம்.. கயிறு ஆர்டர் செய்து காதலியை கழுத்தை நெறித்து கொன்ற கொடூரம்!

 

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாயா கோகாய் என்ற 19 வயது இளம்பெண், கடந்த 23-ஆம் தேதி சனிக்கிழமை, கர்நாடக மாநிலம் பெங்களூரு இந்திராநகர் பகுதியில் உள்ள ஹோட்டலில் தனது காதலன் ஆரவ் ஹர்னியுடன் ரூம் எடுத்து தங்கியுள்ளார். மாயா இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிடுவதில் ஆர்வமாக இருந்தார். மாயா காதலன் ஆரவ்விடம் சரியாக பேசவில்லை. இதனால் கோபமடைந்த காதலன் அவரை கண்டித்துள்ளார். மேலும், மாயா வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பதை அறிந்த ஆரவ்,  காதலியை பழிவாங்க திட்டம் தீட்டினார்.

மதியம் 12.30 மணியளவில் அறைக்குள் நுழைந்தவர்கள் இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை, ஆனால் நேற்று [செவ்வாய்கிழமை] காலை 8.30 மணியளவில் அவரது காதலன் ஆரவ் ஹர்னி வெளியே வந்தார். அவர் சென்ற பிறகு, அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது, ஹோட்டல் ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, ​​மாயா கத்தியால் குத்தி கொல்லப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மாயா கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நாட்களாக அவர் உடலுடன் இருந்ததாகவும், பெரும்பாலான நேரம் உடலின் முன் அமர்ந்து சிகரெட் புகைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாயாவின் உடலில் தலை உட்பட பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. குறிப்பாக மார்பில் காயம் இருந்தது. அறையில் இருந்தபோது செப்டோவிடம் இருந்து நைலான் கயிற்றையும் ஆர்டர் செய்திருந்தார் ஆரவ்.

மாயா கோகாய் யூடியூப்பில் Vlogger என்பது தெரியவந்துள்ளது. நவம்பர் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை வேறு யாரும் அறைக்குள் சென்றது சிசிடிவி காட்சிகளில் தெரியவில்லை.இதனால் ஆரவ் தான் கொலையாளி என்பது உறுதியாகி போனை அணைத்து விட்டு தலைமறைவான அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!