தவெக மாநாட்டு பணியை முடித்து சென்ற போது விபத்து.. உயிரிழந்த காவலருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்!
விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தவெக மாநாட்டு பணியை முடித்து வீடு திரும்பியபோது விக்கிரவாண்டி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் சத்தியமூர்த்தியின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரியும் திரு.சத்தியமூர்த்தி (வயது 27) (பிசி 1347), கடந்த 26.10.2024 அன்று இரவு 8.00 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விக்கிரவாண்டி வட்டம், விழுப்புரம் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அரசியல் கட்சி நடத்தும் மாநாட்டின் பாதுகாப்புக்காக மாவட்டம். அய்யூர் அகரம் மேம்பாலம் அருகே எதிர்பாராதவிதமாக கார் மோதியதில் பலத்த காயம் அடைந்தார்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (29.10.2024) உயிரிழந்தார் என்ற துக்கச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். காவலர் திரு.சத்தியமூர்த்தியின் மறைவு தமிழக காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். காவலர் திரு.சத்தியமூர்த்தியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரியும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது குடும்பத்திற்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!