undefined

குழந்தையை கூட தூக்க விடாமல்... கள்ளக்காதலால் மனைவி விபரீத முடிவு!

 

திருவள்ளூர் ஒண்டி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவில் பிரசாத் (28) - பவானி என்ற இளம்தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒன்றரை வயது குழந்தை உள்ளது. பிரசாத் படப்பை பகுதியில் உள்ள மொபைல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடன் பணிபுரியும் கவிதா என்ற பெண்ணுடன் பிரசாத்துக்கு பழக்கம் ஏற்பட்டது. 

பின்னர் இந்த பழக்கம் நெருக்கமாகி கள்ளக்காதலாக மாறியது. இவரும் ஊர் சுற்றிய விவகாரம் மனைவி பவானிக்கு தெரியவந்தது. இதனால் பவானி மற்றும் பிரசாத் இருவருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவன் - மனைவி இருவரும் ஓராண்டாக  பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கவிதா என்ற பெண்ணுடன் தொடர்பில் இருப்பதால் அடிக்கடி வீட்டிற்கு வராமல் வெளியிலேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில், கனவனின் கள்ளக்காதலி கவிதா பிரசாத்தின் மனைவி பவானிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தனக்கும் பிரசாத்திற்கும் திருமணம் முடிந்து விட்டது என்றும், தான் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். எனவே எங்களை ஒன்றாக வாழவிடு என்றும் பேசியுள்ளார். இதனால் மனம் உடைந்துபோன பவானி அழுதுக்கொண்டே குடும்பம் நடத்தியுள்ளார்.

மேலும் பவானிக்கு பிறந்த குழந்தையை கூட பிரசாத் தூக்காமல் இருந்துள்ளார். இதனால் அடிக்கடி வாக்குவாதம் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு கணவனுடன் தொலைபேசியில் பேசிய பின்பு பவானி அவரது படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கிட்டுள்ளார். இதையறிந்த உறவினர்கள் உடனடியாக பவானியை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்தபோது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த பவானியின் பெற்றோர் சம்பவம் குறித்து மணவாள நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் பிரசாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்