undefined

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

 

ஆடி மாதம் முழுக்கவே அம்மன் மாதமாக கொண்டாடப்பட்ட நிலையில், ஆடி மாதம் முடிந்ததும் பலரும் நின்று போன காரியங்களைத் துவங்க ஆயத்தமாவார்கள்.எந்தவொரு காரிய வெற்றிக்கும் முதன்முதலில், முதற்கடவுளான பிள்ளையாரைக் கும்பிட்ட பிறகு தானே துவங்குகிறோம். அந்த விநாயகர் அவதரித்த மாதம் ஆவணி மாதம் தான். கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததும் ஆவணி மாதத்தில் தான்.

ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை!

எப்படி ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகள் விசேஷமானவையோ அதே போன் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும் விசேஷமானவை. ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஞாயிறு என்றாலே சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 6.00 – 7.00 மணி வரை சூரிய ஓரையே இருக்கும்.

ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மீக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவார்கள். தேக நலனுக்காக சூரிய நமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள், அந்த பயிற்சிகளை ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷமாகும்.

விநாயகர் சதுர்த்தி :

விநாயகருக்கு உரிய விரதங்களுள் மிக விசேஷமானதும், முக்கியமானதுமானது சதுர்த்தி. ஆவணி மாதத்தின் சதுர்த்தி தினத்தில் தான் விநாயகர் அவதரித்தார். அதனால் தான் ஒவ்வொரு சதுர்த்தியையும் கொண்டாடுகிறோம். விநாயகரை போற்றி வரும் ஆவணி சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தியில் விரதமிருந்து வழிபட அனைத்து நன்மையும் கிடைக்கும்.ஆவணி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் நீண்ட நாட்கள் தங்கலாம். திருமணம் செய்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.விவசாயத்திலும் ஆவணி மாதம் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் விவசாயிகள், ஆவணி மாதத்தில் சற்றே ஓய்வு எடுத்துக்கொள்வதுடன், ஒட்டுமொத்த வேளாண் மக்களும் தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை, விழாக்களை நடத்தி மகிழ்வார்கள்.

ஆவணி 1    - ஆகஸ்ட் 18-வெள்ளி-ஆவணி மாதப்பிறப்பு
ஆவணி 3- ஆகஸ்ட் 20- ஞாயிறு-நாக சதுர்த்தி, சதுர்த்தி விரதம்
ஆவணி 4    -ஆகஸ்ட் 21-திங்கள்    -நாக பஞ்சமி, கருட பஞ்சமி, சோமவார விரதம்
ஆவணி 5    -ஆகஸ்ட் 22-செவ்வாய்-சஷ்டி
ஆவணி 8    -ஆகஸ்ட் 25-வெள்ளி-வரலட்சுமி விரதம்


ஆவணி 10-ஆகஸ்ட் 27-ஞாயிறு-ஏகாதசி விரதம்
ஆவணி  11-ஆகஸ்ட் 28-திங்கள்- சோம பிரதோஷம்
ஆவணி 12-ஆகஸ்ட் 29-செவ்வாய்-திருவோணம்
ஆவணி 13-ஆகஸ்ட் 30-புதன்-    ஆவணி அவிட்டம், பௌர்ணமி ரக்‌ஷா பந்தன்
ஆவணி 14-ஆகஸ்ட் 31-வியாழன்-காயத்ரி ஜபம், பௌர்ணமி
ஆவணி 17-செப்டம்பர் 3-ஞாயிறு    சங்கடஹர சதுர்த்தி
ஆவணி 19-செப்டம்பர் 5- செவ்வாய்-கார்த்திகை, பலராம ஜெயந்தி, ஆசிரியர் தினம்
ஆவணி 20-செப்டம்பர் 6- புதன்- கிருஷ்ண ஜெயந்தி
ஆவணி 22-செப்டம்பர் 8- வெள்ளி-தேவமாதா பிறந்தநாள்


ஆவணி 24-செப்டம்பர் 10- ஞாயிறு    ஏகாதசி
ஆவணி 25-செப்டம்பர் 11- திங்கள்-பாரதியார் நினைவு நாள்
 ஆவணி 26-செப்டம்பர் 12- செவ்வாய்-பிரதோஷம்
ஆவணி 27-செப்டம்பர் 13- புதன்-மகா சிவராத்திரி
 ஆவணி 28-செப்டம்பர் 14- வியாழன்-     அமாவாசை
 ஆவணி 30-செப்டம்பர் 16- சனி-சந்திர தரிசனம்
 ஆவணி 31-செப்டம்பர் 17-ஞாயிறு    - விநாயகர் சதுர்த்தி, விஸ்வகர்மா ஜெயந்தி, கன்னி சங்கராந்தி

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!