undefined

மேலும் ரூ3.5 கோடி மதிப்பு நிலத்தை தானமாக வழங்கிய ஆயி பூர்ணம் அம்மாள்...!

 

மதுரை சர்வேயர் காலனியில் வசித்து வருபவர் பூர்ணம் அம்மாள். இவருக்கு வயது 52. இவரது  கணவர், தனியார் வங்கியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்த   நிலையில்  1991ஆம் ஆண்டு காலமானார்.  அதே வங்கியில் வாரிசு அடிப்படையில் கிளார்க் பணியில் இருந்து வருகிறார் ஆயி பூரணம் அம்மாள். இவருடைய கணவர்  31 ஆண்டுகளுக்கு முன்பு   இறந்து விட்டாலும், தனி ஆளாக நின்று தனது மகளை பட்டப்படிப்பு  படிக்க வைத்தார் பூர்ணம் அம்மாள்.

 மகளை திருமணம் செய்து கொடுத்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு   ஜனனி  உயிரிழந்து விட்டார்.  கணவர் மறைந்த பிறகு தனக்கு உறுதுணையாக இருந்த மகளும் காலமாகி போனதில் மொத்தமாக   இடிந்து போனார் பூர்ணம் அம்மாள்.   மகளின் நினைவாக, மதுரை கொடிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அரசுபள்ளிக்கு ரூ7கோடி மதிப்புள்ள   தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தை   கடந்த மாதம் தானமாக கொடுத்தார்.  

இதனை சிறப்பிக்கும் வகையில் தமிழக  குடியரசு தினவிழாவில்  முதல்வரின் கைகளால் அரசின் சிறப்பு விருதை அவர் பெற்றார். இந்நிலையில் மதுரை கொடிக்குளம் பள்ளிக்கு தற்போது கூடுதலாக 91 சென்ட் நிலத்தையும்  பூரணம் அம்மாள் தற்போது வழங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு ரூ. 3.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க