undefined

 மின்சாரம் தாக்கிய கணவரைக் காப்பாற்றி இளம்பெண் உயிரிழப்பு!

 
 


ஆந்திர மாநிலம், பத்ராத்திரி மாவட்டம் கொத்தகுடம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் கணவரை காப்பாற்றிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.மின்சாரம் தாக்கியதில் இருந்து கணவரை காப்பாற்ற முயன்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் தற்போது உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆந்திர மாநிலம் பத்ரதாரி கொத்தகுடேம் மாவட்டத்தில் பாண்டுரங்கபுரம் கிராமத்தில் மளிகைக் கடை நடத்தி வருபவர் சர்வேஷ். இவருடைய மனைவி சம்மக்கா. இந்த தம்பதியர் தங்களது மளிகைக் கடையில் பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த போது, சர்வேஷ் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் சென்ற சம்மக்கா தனது கணவரை மீட்க முயன்றார். உடனடியாக சம்மக்காவையும் மின்சாரம் தாக்கியது. ஆனால், கட்டையால் தள்ளி விட முயன்றதில், சர்வேஷ் மின்சார தாக்குதலில் இருந்து தப்பித்தார். 

உடனடியாக சம்மக்காவை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மனுகுரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, சம்மக்கா வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சர்வேஷ் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை