undefined

 ஆசை வார்த்தை கூறி மலேசிய பெண்ணிடம் எல்லை மீறிய வாலிபர்.. வேலை முடிந்ததும் கழட்டி விட்ட கொடூரம்.!

 
மலேசிய நாட்டு பெண்ணை காதலிப்பதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு ஏமாற்றிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மலேசியா நாட்டை சேர்ந்த 34 வயதுடைய இளம்பெண்ணுக்கு திருத்தணி அடுத்த பாகவதபுரம் கிராமத்தை சேர்ந்த திருமலை கிருஷ்ணன் (வயது 28) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பு நாளடைவில் காதலாக மாறிய நிலையில் அந்த பெண் கடந்த 2018-ம் ஆண்டு மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்து திருமலை கிருஷ்ணனை சந்தித்து சென்றுள்ளனர்.

பின்னர் கடந்த மே மாதம் சென்னைக்கு தனியாக வந்த அவர், சென்னை தனியார் ஓட்டலில் தங்கிய நிலையில், அங்கு வந்த திருமலை கிருஷ்ணன், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து உள்ளார். பின் இரண்டு மாதம் கழித்து தனக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆக உள்ளதாகவும், அதனால் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

இதையடுத்து திருத்தணி பேருந்து நிலையத்தில் அவரை சந்திக்க வேண்டும் எனக்கூறி வரவழைத்து இளம்பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில், திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமலை கிருஷ்ணனை கைது செய்து விசாரிக்கின்றனர்.