இதப் பார்றா... சாட்ஜிபிடி மூலம் திருமணத்துக்கு பெண் தேடிய இளைஞர்... !
இன்றைய இளைஞர்கள் பெண் தேடுவதற்கு மேட்ரிமோனியல் வலை தள பக்கத்தில் தேடுகின்றனர். ரஷ்யாவில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் தனது திருமணத்திற்குப் பொருத்தமான பெண்ணை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்துள்ளார். அதன்படி சாட்ஜிபிடி மூலம் தனது வருங்கால மனைவி யார் என்று கண்டுபிடித்துள்ளார்.
உலகம் முழுவதும் பல துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு தினசரி அதிகரித்து வருகிறது.அதிலும் சாட்ஜிபிடி வருகைக்குப் பின் பல்வேறு AI தொழில்நுட்பம் பயன்பாடுகள் தினம் புதுப்புது அப்டேட்களை அள்ளி குவித்து வருகின்றன. இந்நிலையில் 23 வயதான ரஷ்யாவைச் சேர்ந்த சாப்ட்வேர் டெவலப்பர் அலெக்சாண்டர் ஜாதன் டிண்டர் தனக்கு பொருத்தமான பெண்ணை டேட்டிங் செயலியின் மூலம் கண்டுபிடித்துள்ளார். இதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் சாட்ஜிபிடியை பயன்படுத்தியுள்ளார்.
"AI தொழில்நுட்பம் சுமார் 5,000 பெண்களுடன் சாட் செய்து, கரினா என்ற பெண்ணை எனக்குப் பொருத்தமானவர் என தேர்வு செய்து கொடுத்தது. இந்த வழியில் பொருத்தமான பெண்ணைக் கண்டுபிடிக்க சுமார் ஓராண்டு காலம் ஆனது" என அலெக்சாண்டர் ஜாதன் கூறுகிறார்.2023ல் இறுதியில் ChatGPT கரினாவை தேர்ந்தெடுக்கலாம் என பரிந்துரை செய்ததாகவும் கரினாவிடம் ப்ரபோஸ் செய்த பின் இருவருக்கும் இடையிலான உறவு சீரானதாகவும் வலுவாகவும் உள்ளதாகவும் ஜாதன் தெரிவித்துள்ளார்.
தான் கரினாவைக் கண்டுபிடிக்க AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது குறித்து கரினாவுக்கு எதுவும் தெரியாது என்றும் அதன் பிறகுதான் அதைத் தெரிந்துகொண்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார். சிறந்த வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு புரோகிராமை உருவாக்க முடியும். ஆனால் இதுபோன்ற ஒரு திட்டத்தை உருவாக்க பல அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க