வாழப்பிடிக்கல... 5 பக்க கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் வழக்கறிஞர்!
கர்நாடகா கே.ஆர் பேட்டை தாலுகா லிங்கபூர் கிராமத்தில் வசித்து வருபவர் 26 வயது பிரேமகுமாரி. இவர் மைசூரில் வசித்து வரும் ராகவேந்திராவை 2022ல் திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்துக்கு வரதட்சிணையாக 150கிராம் தங்கம் மற்றும் ரூ5லட்சம் ரொக்கம் கொடுத்தனர். 3 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் பிரேமகுமாரியை மேலும் ரூ64லட்சம் கேட்டு வரதட்சிணைக் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
வழக்கறிஞராக ஆசைப்பட்ட பிரேமகுமாரி வீட்டில் இருந்தே படிக்க ஆரம்பித்தார். வரதட்சணை வாங்கி வராததால் கணவர் வீட்டில் இருந்து பிரேமகுமாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். வீட்டில் இருந்த பிரேமகுமாரி நேற்று முன்தினம் 5 பக்கத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலைக் கைப்பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கடிதத்தில் வழக்கறிஞராக வேண்டும் என்ற எனது கனவு நனவாகியுள்ளது.
அதே நேரத்தில் என் கணவருடைய கோபத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. எந்நேரமும் பயத்துடனே வாழ்க்கையை நடத்த வேண்டியிருக்கிறது. நல்லவர்கள் போல் நடித்து ஏமாற்றி விட்டனர். பணக்கார வீட்டு பெண்ணான எனக்கு சாக தைரியம் இல்லை, வாழவும் ஆசை இல்லை எனக் கடிதத்தில் கூறியுள்ளார். இதையடுத்து பிரேமகுமாரி குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், ராகவேந்திரா குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!