சேலை கட்டி, இரு கைகளையும் விட்டு ராயல் என்ஃபீல்டு வண்டி ஓட்டும் இளம்பெண்... வைரல் வீடியோ!
இன்றைய வாழ்க்கைமுறையில் இளசுகள் தங்களுடைய புகைப்படங்கள், வீடியோக்களுக்கு லைக்குகள் பெற விபரீதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து எத்தனையோ விழிப்புணர்வுகள் கொடுக்கப்பட்டாலும் இளசுகள் ஓயவேஇல்லை. அந்த வகையில் தற்போது சேலை அணிந்து கொண்டு ஒரு பெண் பைக் ஓட்டிய வீடியோ வெளியாகி பயனர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் மட்டும்தான் பெரிய பைக்கை ஓட்ட வேண்டும் என்ற நிலை மாறி தற்போது பெண்களும் பைக் ஓட்டி வருகின்றனர்.
இது குறித்து வெளியான வீடியோவில் இளம்பெண் ஒருவர் சிவப்பு நிற ராயல் என்ஃபீல்டு பைக்கை சிவப்பு நிற சேலை அணிந்து கொண்டு ஓட்டுகிறார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்த நிலையில் சாலையில் செல்லும் போது ஒரு கையில் பைக்கை பிடித்துக் கொண்டு மற்றொரு கையில் சேலையை அசைத்தவரே ஓட்டிச் செல்கிறார். சில நொடிகளில் இரு கைகளையும் விட்டவாரும் பைக் ஓட்டுகிறார். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் லைக்குகளை குவித்து வருகிறது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!