undefined

பேசி மயக்கிய இளம்பெண்.. லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து ஏமாந்த நபர்!

 

கேரள மாநிலம் திருச்சூரில் 60 வயது தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்ணுடன் பழகியுள்ளார். அப்போது அந்த இளம்பெண், தான் எர்ணாகுளத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருவதாகவும், கல்லூரி கட்டணம் செலுத்த பணம் இல்லை எனவும், அதனால் ரூ.1000 கேட்டதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய முதியவர் உடனடியாக 1000 ரூபாயை அனுப்பி வைத்தார். இதையடுத்து இருவரும் நெருக்கமாகிவிட்டனர். ஆனால் இருவரும் நேரில் சந்தித்ததில்லை. இந்நிலையில், இளம்பெண் முதியவரிடம் அடிக்கடி பணம் கேட்டுள்ளார்.

திடீரென ஒருநாள், வீடியோ அழைப்பில் அழைத்த இளம்பெண் உடலில் ஆடையின்றி நிர்வாணமாக நின்று கொண்டிருந்தார். மிகுந்த மகிழ்ச்சியில் முதியவர் நீண்ட நேரம் வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டிருந்தார். பின்னர், மறுநாள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் வீடியோவை காட்டி, இந்த வீடியோவை உங்கள் உறவினர்களுக்கு அனுப்பாமல் இருக்க கூடுதல் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் பதற்றமடைந்த முதியவர், இளம்பெண் கேட்கும் போதெல்லாம் பணம் அனுப்பியுள்ளார். ஒருகட்டத்தில் பணம் இல்லாததால் மனைவி மற்றும் மாமியார் நகைகளை அடகு வைத்து ரூ.2.50 கோடி வரை இளம்பெண்ணுக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் முதியவரின் மகனுக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மகன் தனது தந்தையுடன் சென்று திருச்சூர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, ​​கருநாகப்பள்ளி பகுதியை சேர்ந்த ஷெமி (38), கொல்லம் பெரிநாடு பகுதியை சேர்ந்த ஷெமியின் கணவர் சோஜன் போஸ் (32) ஆகியோர் வியாபாரியை மயக்கி பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், முதியவரிடம் பறித்த பணத்தில் 82 பவுன் நகை மற்றும் விலை உயர்ந்த கார்களை வாங்கியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தம்பதியினர் திருச்சூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!