undefined

சுத்துப்போட்ட 20 நாய்கள்.. சிக்கிக்கொண்ட இளம்பெண் பரிதாப பலி.. கதறும் கணவர்..!

 

பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டத்தில் உள்ள பஸ்சன் காதிம் கிராமத்தில் வசிப்பவர் பாரி தேவி (32). கால்நடைகளுக்கு தீவனம் சேகரித்துக் கொண்டிருந்த இவரை தெருநாய்கள் கடித்துள்ளன. இச்சம்பவம்  செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக பொலீசார் தெரிவித்தனர்.

வெகு நேரமாகியும் பாரிதேவி வீடு திரும்பாததால், அவரது கணவர் ஊரில் உள்ளவர்களுடன் சேர்ந்து அவரை தேடத் தொடங்கினார். ஒரு கட்டத்தில், சுல்தான்பூர் லோதியில் உள்ள விலங்குகளின் சடலங்களைக் கொட்டும் இடத்திற்கு அருகிலுள்ள வயல்களில் அவரது உடல் சிதைந்த நிலையில் காணப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். தம்பதிக்கு ஒன்பது மாதம், 6 வயது மற்றும் 10 வயதில் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இறந்தவரின் கணவர் கேவல் தாக்கூர் கூறுகையில், “எனக்கு ஒன்பது மாத குழந்தை உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். இப்போது அவர்களை எப்படி வளர்ப்பேன்? யார் எங்களுக்கு உதவுவார்கள்? ”  என்று வேதனை தெரிவித்தார். சமீபத்தில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறு வயது குழந்தை ஒன்றை தெருநாய்கள் கடித்ததால் இறந்தது. மற்றொரு பெண்ணும் தெருநாய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பாரி தேவியும் தெருநாய்களால் உயிரிழந்தார். தெருநாய்களுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை, 2 பெண்கள் உட்பட 3 பேர் தெருநாய்களால் தாக்கப்பட்டதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு துணை கமிஷனர் அமித்குமார் உத்தரவிட்டுள்ளார். கால்நடைத்துறை அலுவலர்கள் மற்றும் இதர துறை அலுவலர்கள் இணைந்து இப்பிரச்னைக்கு தீர்வு காணவும், நாய் கொலைகளை கட்டுப்படுத்தவும், அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் என்றார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க