undefined

80 பேரை விமானத்தில் அழைத்து வந்த கேப்டன் ரசிகர்.. சமாதிக்கு செல்ல 8 லட்சம் செலவு செய்த நெகிழ்ச்சி செயல்..!

 

விஜயகாந்த் நினைவிடத்திற்கு விஜயகாந்த் ரசிகர் ஒருவர் தனது தொழிலாளர்கள் 80 பேரை சொந்த செலவில் விமானம் மூலம் அழைத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கேப்டன் விஜயகாந்த் காலமானதையடுத்து தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் அவரது நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.



இந்த நினைவிடத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் விஜயகாந்தின் தீவிர ரசிகரான மதுரையை சேர்ந்த மாயன் என்பவர் மதுரையில் இருந்து தனக்கு கீழ் பணிப்புரியும் தொழிலாளர்கள் 80 பேரை சொந்த செலவில் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தார். இதற்கான விமானச் செலவு மட்டும் ரூ.8 லட்சம் என்று தெரிகிறது.

விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தொழிலாளர்களை அழைத்து வந்த மாயன் நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்துக்கு இன்னும் தீவிர ரசிகர்கள் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இவரின் நடவடிக்கை இருப்பதாக அறியப்படுகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க