undefined

நேருக்கு நேர் மோதிக்கொண்ட இருசக்கர வாகனம்.. இருவர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!

 

ஆர்.கே.பேட்டை அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் முதியவர் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே வெடியங்காடு அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (64). வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் உசைன் (24).

இவர் ஆர்.கே.பேட்டையில் உள்ள இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இன்று காலை விவசாயி மகேந்திரன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக கீரைசாத்து கிராமத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் நோக்கிச் சென்றபோது, ​​மகேந்திரனின் இருசக்கர வாகனத்தை ஆர்.கே. பெட்டிக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்த உசைன் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த மகேந்திரனும், உசனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த ஆர்.கே.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!