போலீஸ் சீருடையை திருடி கல்லா கட்டிய இளைஞர்... தட்டித் தூக்கிய காவல்துறை!!

 

தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் இரவு நேரங்களில் காவல்துறையினர் பகுதி வாரியாக ரோந்து செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னை விருகம்பாக்கத்தில் ம் ரெட்டி தெரு சந்திப்பில் இன்று அதிகாலை விருகம்பாக்கத்தில்   போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த  இளைஞரிடம்  சோதனனை நடத்தப்பட்டது.  அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்ததால்  வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.ஆத்திரத்தில் அந்த இளைஞர்   இருசக்கர வாகனத்தை திருப்பி தரச்சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  

ஆனால் போலீஸார் வாகனத்தை தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் திடீரென காவல் நிலையம் பக்கத்தில் உள்ள காவலர் ஓய்வு அறைக்கு சென்று அங்கிருந்த காவலர் சீருடை எடுத்துக் கொண்டு காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார்.  ரெட்டி தெரு அருகே வாகனத்தை நிறுத்தி   காவலர் உடையை அணிந்து கொண்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளை வழிமறித்து வசூலில் ஈடுபட்டுள்ளார்.சந்தேகமடைந்த வாகனம் ஓட்டிகள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

இதன் பேரில் அங்கு சென்ற போலீஸார் அந்த வாலிபரை கைது செய்தனர். அவர் விருகம்பாக்கம் பாண்டியன் தெருவில் வசித்து வரும்   குபேந்திரன். அவர்  காவல் நிலையத்தில் இருந்து காவலர் உடையை திருடிச் சென்று வசூலில் ஈடுபட்டதையும் ஒத்துக் கொண்டார்.   இதனையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து குபேந்திரனை கைது செய்தனர். மேலும் குபேந்திரன் மதுபோதையில் இருந்ததால் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  போதையில் போலீஸில் சிக்கிய வாலிபர் காவல் நிலையத்தில் காவலர் ஓய்வு அறையில் இருந்த சீருடையை திருடிச் சென்று வசூலில் ஈடுபட்ட சம்பவம் மாநகர் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!