டீ பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. டீ குடித்தால் தற்கொலை எண்ணம் தூண்டுமாம்..!

 
அடிக்கடி டீ குடிப்பதால் தற்கொலை எண்ணம் மனிதர்களுக்கு அதிகரித்து வருவதாக ஆய்வில் வெளிவந்துள்ளது பகீர் கிளப்பியுள்ளது.

மனிதர்கள் வாழ்வில் இன்றிமையா ஒன்று தான் டீ. இது குறிப்பிட்ட நாட்டுக்கு சொந்தமானது மட்டுமல்ல. பூமியில் உள்ள அனைத்து மனிதர்களும் நாள் தொடங்கி முடியும் வரை டீயுடன் இணைந்து இருக்கின்றன.

இந்நிலையில் சீனாவின் சிங்வா பல்கலைக்கழகம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களிடையே ஆய்வுகள் நடத்தியுள்ளது. இதில் அடிக்கடி டீ குடிக்கும் மாணவர்களிடம் மனச்சோர்வு மற்றும் பதற்றம் அதிகமாக உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டீ யில் உள்ள ’காஃபின்’ என்ற வேதிபொருள் மனசேர்வையும், தனிமை உணர்வையும் அதிகரிக்கிறது என சீனா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அடிக்கடி டீ குடிப்பது குற்ற உணர்ச்சியை அதிகரிப்பத்தோடு, தற்கொலை எண்ணத்தைத் தூண்டுவதாக உள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், அடிக்கடி டீ குடித்துவிட்டு திடீரென நிறுத்தினால் நிச்சயமாக மனசோர்வு அதிகரிக்கக் கூடும் என்பது உண்மைத்தான். டீ குடிப்பதால் சுறுசுறுப்பாக உணரலாம் என்றும், புத்துணர்ச்சி தரும் ஊக்கமருந்தாகவும் மக்கள் நினைக்கின்றன. ஆனால் தற்காலத்தில் டீக்கு மக்கள் அடிமையாகி வருவது நிதர்சனமான உண்மை.