undefined

10 வயதில் மாயமான மகன்.. 22 ஆண்டு கழித்து துறவியாக வந்ததால் அதிர்ச்சி.. கண்ணீர் விட்டு கதறிய பெற்றோர்கள்..!

 

2002 ஆம் ஆண்டில், உத்தர பிரதேச மாநிலம் அமேதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் புதுதில்லியில் வசித்து வந்தது. அப்போது அவர்களது 10 வயது மகன் காணாமல் போனார். அவர்கள் அவரை வெகுநாள் வரை தேடினார்கள், ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. குழந்தை உயிருடன் இருக்கிறதா இல்லையா என்பது கூட குழந்தையின் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரியவில்லை. இந்த நிலையில்  தான் கடந்த சில நாட்களுக்கு முன் அமேதி கிராமத்திற்கு ஒரு இளம் துறவி வந்துள்ளார். அவரது வயிற்றில்  அறுவை சிகிச்சை செய்த அடையாளம் இருந்துள்ளது.



அந்த அடையாளம் காணமல் போன சிறுவனின் அடையாளத்துடன் ஒத்துப்போனது. இதனைப் பார்த்த உறவினர்கள் புதுடெல்லியில் வசிக்கும் அவரது பெற்றோருக்கு  தகவல் தெரிவித்தனர். கிராமத்திற்கு விரைந்த பெற்றோர், தங்கள் மகனை அடையாளம் கண்டுகொண்டனர். எவ்வாறாயினும், அவர் தனது உறவினர்களை சந்திக்க கிராமத்திற்கு வரவில்லை. மத வழிப்பாட்டிற்காக கிராமத்திற்கு வந்த வேளையில் தனது பெற்றோர்களை சந்தித்துள்ளார். மத வாழ்க்கையின் ஒரு முக்கியமான சடங்கை நிறைவேற்றுவதற்காக கிராமத்திற்குச் வந்ததாக மகன் கூறினார்.

துறவியின் தந்தை அவரைக் கண்டதும், அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தன. துறவியின் வழக்கப்படி தனது தாயிடம் அவர் பிச்சை கேட்டார், ஆனால் தாய் கொடுக்க மறுத்துவிட்டார். மகனிடம் எங்களுடன் நீ இருக்க வேண்டும் என்று தாய் மற்றும் தந்தை கேட்டுள்ளனர். இருப்பினும், துறவி மறுத்துவிட்டு அவர் தங்கியிருந்த இடத்திற்கே மீண்டும் திரும்பினார்.  22 ஆண்டுகள் கழித்து கண்டுபிடிக்கப்பட்ட மகன் துறவியானதை கண்டு பெற்றோர்கள் சோகத்தில் மூழ்கினர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க