ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய பள்ளி மாணவன் தவறி  விழுந்து மரணம்!

 

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கல்லூரியில் விண்ணப்பம் வாங்குவதற்காக  சென்ற போது, ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய போது தவறி விழுந்து ரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை எண்ணூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் முஹம்மது நாசர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவரது மகன் முஹம்மது நபில்(17) +2 தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர்வதற்காக காத்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை நபில் ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் விண்ணப்பம் வாங்குவதற்காக எண்ணூர் ரயில் நிலையம் வந்துள்ளார். அங்கிருந்து பீச்சில் இருந்து பொன்னேரி செல்லும் ரயிலில் தவறுதலாக ஏறிய மாணவன் நபில் ரயில் ஆவடியில் நிற்காது என்பதை கேள்விப்பட்டு உடனே ஓடும் ரயிலில் இருந்து இறங்கி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக  நடைமேடைக்கும்-தண்டவாளத்திற்கும் இடையே தவறி விழுந்ததில், ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.‌ 


இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் உடனே ரயில்வே போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் உயிரிழந்த மாணவன் முஹம்மது நபில் உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.‌ பின்னர் விபத்து குறித்து ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். +2 முடித்து விட்டு கல்லூரியில் விண்ணப்பம் வாங்க சென்ற மாணவன் ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய போது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!