ஆச்சர்யம்...  ஆழ்கடலில் புதிய  வகை ஏலியன் போன்ற ”கடல் குக்கும்பர்”!

 

பூமியில் தேடத்தேட அதிசயங்களும், வினோதங்களும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகின்றன.  உலகம் முழுவதும் உள்ள அனைத்து வகையான உயிரினங்களில்  முதல் முறையாக தோன்றியவை கடல்வாழ் உயிரினங்களே என்கின்றனர் அறிவியலாளர்கள். இந்நிலையில்    பூமியில் 71% கடல் பரப்பு மீதமுள்ள 29% நிலப்பரப்பில் மனித இனம் உயிர்வாழ்ந்து வருகிறது. கடலில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.   அந்த வகையில் மெக்சிகோ மற்றும் ஹவாய் தீவிற்கு இடைப்பட்ட பசிபிக் கடலில் விஞ்ஞானிகள் தொடர் ஆராய்ச்சிகளை செய்து வரும் நிலையில்  உலகின் இதுவரை கண்டறியப்படாத வினோத உயிரினங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளனர். இந்த வகையான உயிரினங்கள் நிலப்பரப்புக்கு  11,480 முதல் 18,045 அடி ஆழத்தில் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  


இவைகள் அபிசோபெலாஜிக் எனப்படும் கடல் மட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அரிய வகை உயிரினத்தை கண்ணாடியின் தன்மை கொண்ட கடல் குக்கும்பர் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த உயிரினத்திற்கு தற்போது Unicumber என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இவைகள் கடலின் ஆழ் மட்டத்தில் உள்ள இயற்கை குப்பைகளை உண்டு உயிர் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலதிக தகவல்களுக்காக தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுதவிர  கடலில் ஆழ் மட்டத்தில் இதுவரை 10 முதல் 9க்கும் மேற்பட்ட உயிரினங்கள் கண்டறியப்படாமலே இருப்பதாக கூறியுள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!