undefined

ஹெல்ப் பண்ணுங்க சகோ... அமெரிக்காவில் வாய் , மூக்கில் இருந்து ரத்தம் ஒழுக கதறும் இந்திய மாணவர்... பகீர் சிசிடிவி காட்சிகள்... !

 

சமீபகாலமாக அமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புகார்களும், குற்றசாட்டுக்களும் எழுந்து வருகின்றன. இதனால் இந்திய மாணவர்கள் உயிரிழப்பும் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தி வருவதாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.  அந்த வகையில் அமெரிக்காவில்  சிகாகோவில் படித்துவரும் இந்திய மாணவர்  கொள்ளையர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு, இரத்தக் காயங்களுடன் உதவிக்காக கெஞ்சுகிறார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில்  தாக்குதலுக்கு உள்ளான மாணவரின் குடும்பத்தினர், அவரைச் சந்திக்க அவசர விசா வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு விண்ணப்பித்துள்ளனர்.  


இந்த வீடியோ குறித்து அவரது குடும்பத்தினர் மிகவும் சோகத்திலும், கவலையிலும் ஆழ்ந்துள்ளனர். அமெரிக்காவில்  சையதுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யவும், அவரைச் சந்திக்க அமெரிக்கா செல்லவும்  உதவி செய்ய வேண்டும் என  மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  சையதுவின் மனைவி, சையதா ருகுலியா பாத்திமா ரிஸ்வி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை  எழுதியுள்ளார். அக்கடித்தில்,"அமெரிக்காவின் சிகாகோவில்  எனது கணவரின் பாதுகாப்பு குறித்து நான் மிகவும் கவலை அடைந்துள்ளேன். அவருக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்கவும்,  என் கணவருடன் இருப்பதற்காக என்னுடயை  3 குழந்தைகளுடன் நான் அமெரிக்கா செல்லவும் உதவி செய்ய வேண்டும்” என   தெரிவித்துள்ளார்.
2024 தொடங்கி ஒரு மாதம் தான் முடிவடைந்துள்ளது. அமெரிக்காவில்   இதுவரை  4  இந்திய  மாணவர்கள் இறந்த நிலையில், சையது மீதான் இந்த தாக்குதல் பெரும் பேசுபொருளாகியுள்ளது.     19 வயதான இந்திய மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகர்,  நீல் ஆச்சாரியா,     ஹரியானாவைச் சேர்ந்த விவேக் சைனி என்ற 25 வயது மாணவர்,   இல்லினோய்ஸ் அர்பானா சாம்பெய்ன் பல்கலைக்கழக வட்டாரத்தில்   அகுல் தவான் என 4 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க