டைட்டானிக் கப்பல் மூழ்கிய ஆண்டில் பிறந்த நபர்.. 112வது வயதில் காலமானார்!
டைட்டானிக் கப்பல் மூழ்கிய அதே வருடத்தில் பிறந்த உலகின் மிக வயதான மனிதர் என்று அறியப்பட்ட ஜான் டினிஸ்வுட், தனது 112வது வயதில் காலமானார். அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். ஜான் டினிஸ்வுட் ஆகஸ்ட் 26, 1912 அன்று இங்கிலாந்தின் லிவர்பூலில் பிறந்தார். அவர் தனது மகள், பேரக்குழந்தைகள் மற்றும் கொள்ளுப் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், கின்னஸ் புத்தகத்தில் உலகிலேயே அதிக வயதானவர் என்ற சான்றிதழைப் பெற்றார்.ஆரோக்கியமாக இருக்க, எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டும் என்று மறைந்த ஜான் டினிஸ்வூட் முன்பு கூறியிருந்தார். நீங்கள் அதிகமாக குடித்தால் அல்லது அதிகமாக சாப்பிட்டால் அல்லது அதிகமாக நடந்தால், நீங்கள் எதையும் அதிகமாக செய்தால், நீங்கள் இறுதியில் பாதிக்கப்படுவீர்கள் என்றும் கூறினார்.
114 வயதான வெனிசுலா ஜுவான் விசென்டே பெரெஸின் மரணத்தைத் தொடர்ந்து, ஜான் டினிஸ்வுட் ஏப்ரல் மாதம் உலகின் வயதான மனிதரானார். உலகிலேயே மிகவும் வயதான பெண்மணியாக தற்போது ஜப்பானைச் சேர்ந்த டோமிகோ இடோகா உள்ளார். அவருக்கு 116 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!