அரசு பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து.. 10 பயணிகள் படுகாயம்..!

 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து கரூர் பள்ளபட்டிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 13 பயணிகள் இருந்தனர். பேருந்தை பாலமுருகன் ஓட்டினார். பிரபாகரன் கண்டக்டராகப் பணியில் இருந்தார். இந்நிலையில், ரங்கநாதபுரம் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட பேருந்து நிறுத்தப்பட்டது.

அப்போது மதுரையில் இருந்து ராஜஸ்தான் நோக்கி சென்ற சரக்கு லாரி பேருந்தின் பின்பகுதியில் மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதனால் பேருந்து குமாரராஜன் என்பவரது வீட்டின் மேற்கூரையை இடித்தது. அதேபோல், மோதிய வேகத்தில் சரக்கு லாரியும் பள்ளத்தில் கவிழ்ந்தது.


இந்த விபத்தில் காந்தி, பாப்பாத்தி, பழனியம்மாள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க