undefined

பெரும் அதிர்ச்சி.. வழக்கறிஞர் வீட்டில் பாய்ந்த துப்பாக்கி குண்டு.. மர்ம நபர்களுக்கு வலை வீச்சு..!

 

சென்னையை அடுத்த தாம்பரம் மீனாம்பாள் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரியா. தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இன்று மாலை தியாகராஜனின் மனைவி பிரியா, மகன் விஷால் ஆகிய 3 பேர் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென வீட்டின் கண்ணாடி உடைந்தது. சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து கண்ணாடி உடைந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தாம்பரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அந்த தோட்டாவை கைப்பற்றிய போலீசார், அது எந்த வகை தோட்டா? இது குறித்து,  தோட்டா எங்கிருந்து வந்தது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த தோட்டா ஏகே 47 தோட்டாவாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க