undefined

பகீர் வீடியோ... இரண்டாக நொறுங்கிய விமானம்... மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு!!

 

 சமீபகாலமாக விமான விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது ஜன்னலை திறத்தல், பயணிகளிடையே வாக்குவாதம், விமானப் பணிகளுடன் தகராறு என அடுத்தடுத்து எழும் பெரும் சர்ச்சைகளால் விமானப் பயணங்கள் என்றாலே அச்சத்தை உருவாக்கும் அளவு மாறிவிட்டன. அந்த வகையில் ஜெட் விமானம் ஒன்று இரண்டாக உடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

<a href=https://youtube.com/embed/-5qMhcRgiU0?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/-5qMhcRgiU0/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Watch: Private jet skids off runway while landing at Mumbai Airport" width="714">


மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஜெட் விமானம் ஓடுபாதையில் சறுக்கி விபத்தில் சிக்கி 2 ஆக உடைந்தது. இந்த விபத்தில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.இந்த விமானத்தில் 6  பயணிகள், 2 பணியாளர்கள் என 3 பேர்  பயணம் செய்துள்ளனர். திடீரென ஏற்பட்ட விமானவிபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் காயமடைந்துள்ளனர்.  இன்று அதிகாலை 5.02மணிக்கு இந்நிகழ்வு ஏற்பட்டுள்ளது.  நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. மும்பை விமான நிலையத்தில் கடுமையான மழை பெய்து வந்தது தான் இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.   விபத்து ஏற்பட்டவுடனே   ஜெட் விமானத்தில் தீப்பற்றியது. உடனடியாக  மீட்பு படையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.


 
விபத்தைத் தொடர்ந்து ஓடுபாதையில் இருந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, முறையான பாதுகாப்பு பரிசோதனைகள் நடைபெற்றன. அதன் பிறகு  தேசிய விமான போக்குவரத்துத்துறை உறுதிப்படுத்திய பிறகே மற்ற விமானங்கள் ஓடுபாதையில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இந்த விபத்து மும்பை விமான நிலையத்தின் 27வது ஓடுபாதையில்  மழை காரணமாக பாதை வழுவழுப்பாக இருந்ததால் 700 மீட்டர்கள் வரை பார்க்கக்கூடிய நிலை இல்லை எனக்  கூறப்படுகிறது. இந்த விபத்து ஏற்பட்ட பிறகு அடுத்தடுத்து தரையிறங்க வேண்டிய 5 விமானங்கள் மற்ற  ஓடுபாதை வழியாக கிளம்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விபத்தில் சிக்கியது லியர்ஜெட் 45 ரக ஜெட் விமானம். இதனை கனடாவை சேர்ந்த வான்வழி போக்குவரத்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.  வி.எஸ்.ஆர். வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என  விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை