undefined

பயங்கர தீ விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி!

 

மகாராஷ்டிர மாநிலத்தில் தையல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள தையல் கடையில் இன்று அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அக்கம் பக்கத்தினர் அலறி அடித்து ஓடினர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால் இந்த பயங்கர தீ விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களில் 3 பெண்கள், 2 ஆண்கள் மற்றும் 2 குழந்தைகள். 7 பேர் உடல் கருகி பலியான சம்பவம் குறித்து சம்பாஜி நகர் போலீஸ் கமிஷனர் மனோஜ் லோஹியா கூறும்போது, 'தையல் கடையின் மேல் மாடியில் குடியிருப்போர் வசித்து வந்தனர். குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவவில்லை.

ஆனால் புகையை சுவாசித்ததால் அவர்கள் இறந்திருக்கலாம். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்