undefined

நின்றுக்கொண்டிருந்த ரயிலில் திடீர் தீ விபத்து.. மளமளவென பற்றிய தீயால் பரபரப்பு..!!

 

ஒடிசா மாநிலம் பூரி ரயில் நிலையத்தில், டிப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒடிசா மாநிலம் பூரி ரயில் நிலையத்தில், டிப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் உள்ள வாஷிங்லைனில் முதலில்தீ விபத்து ஏற்பட்ட நிலையில், ரயிலிலும் தீ பற்றியது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த விபத்தில் ரயிலின் பெட்டி ஒன்று முழுவதுமாக எரிந்து சேதமடைந்து கரும்புகை வெளியேறியது. உடனடியாக மற்ற பெட்டிகள் துண்டிக்கப்பட்டதால், தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

பேட்டரி பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் முழுமையான விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.