undefined

சுவர் இடிந்து விழுந்து ஹோட்டல் பெண் ஊழியர் பலி!! கனமழையால் சோகம்!!

 

தமிழகம்  முழுவதும் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் பரவலாக  நல்ல  மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட தமிழகத்தில் குறிப்பிட்ட சில பகுதிகைல்   இரவு நேரத்தில் கன மழை பெய்து வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உணவக சமையல் அறையின் பழைய பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் உணவகத்தில்  பணிபுரிந்த   பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


 இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் 2 பேர் வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு   பிரேத பரிசோதனைக்காக வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து  காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் தனியார் உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் அதற்கு முன்பு அனைத்து பழைய கட்டிடங்களையும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்காக சுற்றறிக்கையை ஆகஸ்ட் மாதத்தில்   தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அனுப்பியிருந்த  த நிலையில் வேலூரில் இந்த துயர சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை