undefined

பிரபல நடிகை சினிமாவுக்கு முழுக்கு போட்டு புத்தமதவாதியாகிய  சோகம்... ரசிகர்கள் அதிர்ச்சி... !

 

பிரபல பாலிவுட் நடிகை பார்க்கா மதன் மாடலிங்கில் இருந்து நடிப்புத் துறைக்குள் அடியெடுத்து வைத்தவர் .இவர் தற்போது நடிப்பிலிருந்து முற்றிலுமாக விலகி  புத்தமதத்தைத் தழுவப் போவதாக அறிவித்துள்ளார். இத்தகவல்  ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாமா ஜோபா ரின்போச்சியின் கீழ், பர்கா மதன் கர்நாடகாவில் உள்ள செரா ஜெய் மடாலயத்தின் ஹர்டாங் காங்செனில் புத்த துறவியாக மாறியுள்ளார்.  அவரது பெயரை வென் கைல்டென் சம்டென் எனவும் மாற்றிக் கொண்டுள்ளார்.  சிறுவயதில் இருந்தே தலாய்லாமா, புத்த மதத்தின் மீது தீவிர பற்றாளராக இருந்துள்ளார்.  இதன் அடிப்படையில்  நடிப்பைக் கைவிட்டு புத்த மதத்திற்குள் நுழைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில்  முண்ணனி நடிகையாக இருந்தவர்  பார்க்கா மதன். இவர் 1996 ல் அக்‌ஷய் குமார் நடித்த 'கிலாடியோன் கா கிலாடி' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்  . முதல் படமே அவருக்கு பெரிய வெற்றியை தந்தாலும், அடுத்த ஆறு வருடங்களில் பாலிவுட் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. பெரிய இடைவெளிக்கு பிறகு இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் 'பூட்' படத்தின் மூலம்ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைபெற்றார்.  அடுத்தடுத்த படங்களில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது.

திரைப்படங்கள் தவிர, அவர் 1857 கிராந்தி, கர் ஏக் சப்னா, சாத் பெரே - சலோனி கா சஃபர் மற்றும் நியாய் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார்.பார்க்கா மதன் நடிப்புத் துறையில் நுழைவதற்கு முன்பு மாடலிங் துறையில் பல ஆண்டுகள் செலவிட்டார். இவர் 1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் சுஷ்மிதா சென் ஆகியோருடன் பைனலில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுஷ்மிதா சென் வெற்றி பெற்றார். 2012 இல், அவர் நடிப்பை விட்டுவிட்டு புத்த மதத்தைத் தழுவுவதாக அறிவித்தார்.

இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லாமா ஜோபா ரின்போச்சியின் கீழ், பார்க்கா மதன் கர்நாடகாவில் உள்ள செரா ஜே மடாலயத்தின் ஹர்டாங் காஞ்சனில் புத்த துறவியாக ஆனார், மேலும் தனது பெயரை கியால்டன் சாம்டென் என்று மாற்றினார். பார்க்கா மதன் சிறுவயதிலிருந்தே புத்த மதத்தில் ஆர்வம் கொண்டவர்.நடிப்புத் துறையில் நுழைந்த அவர் தலாய் லாமாவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு நடிப்பை கைவிட்டு புத்த மதத்தில் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க