undefined

10வது முடித்து விட்டு அறுவை சிகிச்சை செய்து வந்த போலி மருத்துவர்... பொதுமக்கள் அதிர்ச்சி!

 
 

 


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 10ம் வகுப்பு படித்து முடித்து விட்டு நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகளைச் செய்து வந்த போலி மருத்துவரைப் போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி காதர்ஜெண்டா தெருவில் உள்ள கிளினிக்கில் நோயாளிகளுக்கு போலி மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்து வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இது குறித்த தகவலின் பேரில் நேற்று வந்தவாசி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சிவப்பிரியா லோகேஸ்வரன், வந்தவாசி தெற்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் விநாயகமூர்த்தி, முருகன் ஆகியோர் கிளினிக் சென்று திடீர் சோதனை நடத்தினர். 

அப்போது கிளினிக்கில் 10வது வரை மட்டுமே படித்த ராய் என்பவர் நோயாளிகளுக்கு மூலம் மற்றும் பவுத்திரம் நோய்க்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இவர் நோயாளிகளுக்கு தனது கிளினிக்கில் அறுவை சிகிச்சைகளையும் செய்து வந்துள்ளார். இது குறித்து வந்தவாசி தெற்கு போலீசில் மருத்துவ அலுவலர் சிவப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து போலி டாக்டர் ஏ.கே.ராயை கைது செய்து வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.இத்தனை வருடங்களாக தங்களது தெருவில் போலி மருத்துவர் ஒருவர் அறுவைசிகிச்சைகள் செய்து வைத்தியம் பார்த்து வந்தது தெரிந்து அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!