undefined

பரபரப்பு... செய்தியாளர் அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு...!!

 

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில்  ஆகஸ்ட்  9ம் தேதி பட்டியலின மாணவர்  சின்னத்துரையின் வீட்டிற்குள் புகுந்து அவரை   அரிவாளால் வெட்டினர்.  மர்மநபர்களை  தடுக்க முயன்ற சின்னத்துரையின் 14 வயது தங்கை சந்திரா செல்விக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிறுவர்களின் தாத்தா கிருஷ்ணன் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.இந்த கோர சம்பவம்  குறித்து  வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.  முதல் கட்ட விசாரணையில், சின்னத்துரை பள்ளியில் நன்றாக படித்ததால் மற்ற சாதி மாணவர்கள் அவரை  சாதிப் பெயரைச் சொல்லி திட்டினர். அத்துடன்  சாதி ரீதியாக அவமதித்து வந்துள்ளனர்.


இதுகுறித்து  சின்னத்துரை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்திருந்தான். தலைமை ஆசிரியை அந்த மாணவர்களை சாதி பெயரை சொல்லி திட்டியதற்கு கண்டித்தார். இனி அப்படி பேசக்கூடாது என அறிவுறுத்தினார். இந்த  ஆத்திரத்தில் மாணவர்கள் 6 பேரும் இந்த சம்பவத்தில் இந்த அரிவா ள் வெட்டில் ஈடுபட்டனர்.  இது குறித்து  தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வானமாமலை என்பவர் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்துள்ளார். இதனால் கைது செய்யப்பட்டவர்கள் தரப்பிற்கும், வானமாமலைக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.   இந்த நிலையில் இன்று காலை நாங்குநேரி பகுதியில் உள்ள வானமாமலைக்கு சொந்தமான கடையில் அவர் இருந்தபோது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கடையின் மீது திடீரென நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.


 வீசியதில் 2 குண்டுகள் வெடிக்கவில்லை.   ஒரே ஒரு குண்டு மட்டும் அங்கிருந்த போர்டில் பட்டு வெடித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த  சம்பவத்தில் யாருக்கும் காயமோ உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சாதிய வன்கொடுமை தொடர்பாக செய்தி வெளியிட்டதற்காக செய்தியாளரின் மீது கொலை வெறியுடன் நாட்டு வெடிகுண்டுகள் வீசிய  சம்பவம்  மாவட்டம் முழுவதும் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!