undefined

அதிர்ச்சி.. படுக்கை அறையில் பேனா கேமரா.. பெண் உடை மாற்றுவதை கண்டு ரசித்த ஹவுஸ் ஓனர் மகன்..!

 

சென்னை ராயபுரம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அபுதாகீர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை அவரது மனைவி படுக்கையறையில் புதிய பேனா இருப்பதைக் கண்டு, அதை எடுத்து ஆய்வு செய்தபோது, ​​பேனாவில் கேமரா இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது கணவர் அபுதாகீருக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து உடனடியாக வீட்டுக்கு வந்த அபுதாகீர், பேனா கேமராவை ஆய்வு செய்தபோது, ​​மனைவி உடை மாற்றுவது போன்ற பல்வேறு ஆபாச வீடியோக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ராயபுரம் காவல் நிலையத்தில் அபுதாகீர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.



விசாரணையில், இரண்டாவது மாடியில் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் மகன் இப்ராகிம் (36) அபுதாகீர் வீட்டின் படுக்கையறையில் பேனா கேமராவை வைத்தது தெரியவந்தது. மேலும், இதன் மூலம் அபுதாகீர் மனைவி உடை மாற்றும் வீடியோக்களை பதிவு செய்ததும் தெரியவந்தது.போலீசார் நடத்திய விசாரணையில், தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.டி.எஸ்., இறுதியாண்டு படிக்கும் இப்ராகிம் பேனா கேமரா மூலம் பல பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் ஆபாச வீடியோ எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து கேமராவை கைப்பற்றிய போலீசார் இப்ராகிமை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க