பெரும் சோகம்... சினிமா பாணியில் 3 முறை உருண்டு தலைக்குப்புற கவிழ்ந்த கார்... 5 இளைஞர்கள் துடிதுடித்து பலி!
சென்னை சூளை பகுதியில் வசித்து வரும் இளைஞர்கள் 5 பேர் ஒன்று சேர்ந்து விடுமுறையை கொண்டாட புதுச்சேரி சென்றனர். ஊரை சுற்றிப்பார்த்து என்ஜாய் பண்ணிவிட்டு காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். கார் கல்பாக்கம் அருகே வயலூர் பகுதியில் வந்துக்கொண்டிருந்த போது. சாலையின் குறுக்கே திடீரென வந்த பசுமாடு மீது மோதி கார் கட்டுப்பாட்டை இழந்தது. சினிமா சண்டைக்காட்சிகளில் வருவது போல் 3 முறை பல்டி அடித்து பின் மரத்தில் மோதி கோரவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தூக்கி எரியப்பட்டு 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் காரில் பின்புறத்தில் சிக்கி 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
காரில் சிக்கிய 3 பேரின் உடல்களை மிஷின் மூலம் வெட்டி எடுத்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த 2 பேர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆக அதிகரித்தது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் உயிரிழந்தவர்கள் சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வரும் 22 வயது ராஜேஷ், வடபழனி ஏழுமலை (30), சூளை எம்ஜிஆர் நகர் விக்கி, மேற்கு மாம்பலம் யுவராஜ் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!