undefined

லாரி மீது கார் மோதி பெரும் விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பரிதாப பலி..!

 

உத்தரபிரதேசம் மாநிலம் வாராணசியில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் பிலிபிட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரசித்திப் பெற்ற  வாராணசி கோவிலுக்குச் சென்று இன்று திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது  அதிகாலை கார்கியாவ் பகுதியில் கார் லாரி மீது மோதியது. இதில் காரில் இருந்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 வயது குழந்தை பிழைத்துக்கொண்டது.

இதுக்குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துத் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிர் தப்பிய குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள உத்தரபிரதேச முதல்வர் யோகி, இந்த விபத்து குறித்து தான் மிகுந்த கவலையடைந்ததாகவும், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.