undefined

9 வயதில் லட்சாதிபதியான சிறுமி.. தந்தையின் கடனை அடைக்க உதவி சேமிப்பு பணம்.. சுவாரஸ்ய பின்னணி!

 

பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே ஆசிரியர்களால் சேமிக்கும் பழக்கம் கற்பிக்கப்படுகிறது. சில குழந்தைகள் ஆசிரியரின் வார்த்தைகளை மனதில் வைத்து சேமிக்கும் பழக்கத்தை கடைபிடிப்பதை காணலாம். கேரளாவில் அப்படிப்பட்ட ஒரு குழந்தை தனது சேமிப்பால் லட்சாதிபதியானது மட்டுமல்லாமல் தனது தந்தையின் வீட்டுக் கடனையும் அடைத்துள்ளார். அதன் விவரத்தை பார்ப்போம்.

கேரள மாநிலம் கருவாரகுண்டில் வசித்து வருபவர் இப்ராகிம். இவரது  மகள், 9 வயது பாத்திமா நஷ்வா. இவர் அருகில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இந்திய அரசு முதன்முதலில் இருபது ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட்டபோது, ​​பாத்திமா 20 ரூபாய் நோட்டுகளின் மீது ஈர்ப்பைப் பெற்றார். இதனால் அதை சேகரிக்க ஆரம்பித்துள்ளார்.

நஷ்வாவின் சேமிப்புப் பழக்கம் இப்ராகிமை ஆச்சரியப்படுத்தியது. மகளின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், தனக்குக் கிடைத்த இருபது ரூபாய் நோட்டுகளையும் தன்  மகளுக்குக் கொடுத்து வந்துள்ளார். பாத்திமா நஷ்வாவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுக சிறுக 20 ரூபாய் நோட்டுகளை சேகரித்து வருகிறார்.

கடந்த வாரம், தான் சேமித்து வைத்திருந்த 20 ரூபாய் அடங்கிய மூட்டையை தந்தை இப்ராகிமிடம் கொடுத்து, எண்ணும்படி கூறியுள்ளார். 20 ரூபாய் நோட்டை எண்ணி மகிழ்ந்தார் இப்ராகிம். காரணம், அந்த மூட்டையில் ரூ.1,03,000 அதாவது 5,150 இருபது ரூபாய் நோட்டுகள் இருந்தன. சிறு தொகையை சேமித்து பெரிய தொகையாக திருப்பிக் கொடுத்த தனது மகளுக்கு சிறிய பரிசை வாங்கி கொடுத்தார்  தந்தை இப்ராகிம் . பின்னர்,  மீதித் தொகையை வீட்டுக் கடனை அடைக்கப் பயன்படுத்தியிருக்கிறார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!