undefined

 ஓவர் டோஸ் ஊசி போட்டதால் 7 வயது சிறுவன் பரிதாபப் பலி... கதறும் தந்தை!  

 

 கர்நாடக மாநிலத்தில்  சிக்மகளூர் பகுதியில் வசித்து வருபவர்  அசோக். இவருடைய  7 வயது மகன் சோனிஷ் . இவர் கடந்த சில நாட்களாக மிக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். வீட்டு வைத்தியம் பலனளிக்காததால்  சிறுவனை மருத்துவமனைக்கு அசோக் அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது சிறுவனுக்கு மருத்துவர் வருண் ஊசி ஒன்றை போட்டுள்ளார்.


வீட்டிற்கு போனதும் சிறுவனின் உடல்நிலை கவலைக்கிடமானது. இதனையடுத்து அலறி அடித்து சிறுவனை அருகில் இருந்த மற்றொரு  மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலன் இன்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இது குறித்து அவரது தந்தை அசோக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


அந்த புகாரில் தனது மகனுக்கு அதிக டோஸ் கொண்ட ஊசியை செலுத்தியதில் சிறுவன் மரணத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வருண் ஆயுர்வேத மருத்துவம் படித்தவர். அவருக்கு  ஊசி போடுவதற்கு அதிகாரம் இல்லை எனவும் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.