500 வருடங்கள் பழமையான சிலை.. இந்தியாவுக்கே திருப்பிக் கொடுக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்!

 

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஏராளமான தொல்பொருட்கள் பல்வேறு நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக கோயிலில் இருந்து திருடப்பட்ட 60 செ.மீ. திருமங்கை ஆழ்வாரின் உயரமான வெண்கலச் சிலை இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் உள்ளது.

16ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிலையை பெற இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த பேச்சுவார்த்தையின் பலனாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தற்போது சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளது. தற்போது பல்கலைக்கழக அறக்கட்டளை ஆணையத்தின் அனுமதி கோரப்பட்டுள்ளது.

500 ஆண்டுகள் பழமையான இந்த வெண்கலச் சிலைக்கு ஆணையம் ஒப்புதல் அளித்ததும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். இதனால் இரு நாட்டுக்கும் பரஸ்பர உறவு மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!