undefined

மருத்துவமனையில் தலைவலியுடன் 7 மணி நேரம் காத்திருந்த பெண்.. பரிதாபமாக பலியான சோகம்.!

 

இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் குயின்ஸ் மருத்துவமனையின் வளாகம் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கடந்த ஜனவரி 19ஆம் திகதி நள்ளிரவு 39 வயதுடைய பெண் ஒருவர் தலைவலிக்காக வந்துள்ளார். 2 குழந்தைகளின் தாயான இவர், இரவில் தனியாக மருத்துவமனைக்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு டாக்டரை பார்க்க 7 மணி நேரம் காத்திருந்துள்ளார்.

செவிலியர்கள் அவரை மூன்று முறை பரிசோதித்துவிட்டு தலைவலி மட்டும் தான் என சொல்லிவிட்டுச் சென்றனர். ஆனால் அந்த பெண்ணிடம் என்ன பிரச்சனை என்று டாக்டர்கள் யாரும் கேட்கவில்லை.இதையடுத்து, அடுத்த நாள், அந்த பெண்ணின் தலைவலி தீவிரமடைந்ததையடுத்து, மருத்துவர்கள் அவரை அழைத்தனர், ஆனால் அவர் பேசவில்லை. தலைவலி அதிகரித்து வருவதால் அவர் சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ICU வார்டுக்கு மாற்றப்பட்ட பெண் ஜனவரி 22 அன்று இறந்தார்.

மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அந்த பெண் உயிரிழந்தார். தலைவலி ஏற்படும் போது உடனடி சிகிச்சை அளித்திருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார் என்று கூறப்படும் நிலையில், குறிப்பிட்ட அந்த மருத்துவமனையில் தினசரி அதிகப்படியானோர் அவசர சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மருத்துவமனை தரப்பில், ”விபத்து மற்றும் அவசர தடுப்பு பிரிவில் தினமும் 80க்கும் மேற்பட்டவர்கள் 12 - 14 மணி நேரத்திற்கு காத்திருக்கின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது. பெண்ணின் இறப்புக்கு இரங்கல் தெரிவிப்பதாக கூறிய மருத்துவமனை நிர்வாகம், இதுதொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விசாரணை முடிந்ததும் வெளியில் இருந்து ஒரு மருத்துவக்குழு வந்து இது தொடர்பாக விசாரிக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தின் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் 12 மணி நேரம் காத்திருந்ததாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க