undefined

  3 வயது சிறுவனின் தலையில் குண்டு காயம்... மணிப்பூர் மாநிலத்தில் பயங்கரம்!  

 


மணிப்பூர் மாநிலத்தில்  மலைப்பகுதி மாவட்டத்தில் ஜிரிபாமில், குகி தீவிரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்ட ஒரு குழந்தை மற்றும் இரு பெண்களின் பிரேத பரிசோதனை  அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  நவம்பர் 11ம் தேதி ஜிரிபாமில் வன்முறையில் ஈடுபட்ட குகி தீவிரவாதிகள் மீது சிஆர்பிஎஃப் போலீஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  குகி சமூகத்தில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில்  அன்றைய தினம் ஆயுதங்களுடன் மைதேயி சமூக மக்களின் வீடுகளுக்குள் புகுந்த குகி தீவிரவாதிகள் 3 பெண்கள், 3 குழந்தைகள் என 6 பேரை கடத்திச் சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, வெவ்வேறு 3 நாள்களில் 6 பேரின் சடலங்களும் மணிப்பூர் - அஸ்ஸாம் எல்லையில் மீட்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில்  சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 6 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை  செய்யப்பட்ட நிலையில்  ஒரு குழந்தை மற்றும் இரண்டு பெண்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. 3 வயது சிறுவன் சிங்கேய் நங்கன்பா சிங், அவரது தாய் லைஷ்ராம் ஹெய்டோம்பி தேவி   மற்றும் அவரது பாட்டி யுரெம்பம் ராணி தேவி(வயது 60) ஆகியோர்  உடல்களில் ஆழமான சிதைந்த காயங்கள் இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக சிறுவனின் தலையில் துப்பாக்கி குண்டு காயம் இருந்ததாகவும், 4 செ.மீ. ஆழமும், 3 செ.மீ. அகல காயம் வலது மார்புப் பகுதியில் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுவனின் உடலின் பல்வேறு பாகங்களில் கத்தியால் தாக்கப்பட்ட காயங்களும் கண்டறியப்பட்டுள்ளது.  சிறுவனின் தாயின் உடலில் 4 இடங்களிலும், பாட்டியின் உடலில் 5 இடங்களிலும் துப்பாக்கி குண்டு காயங்கள் உள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 பேரின் பிரேத பரிசோதனை  அறிக்கைகள் இன்னும் வெளியாகவில்லை.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!