undefined

 நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்...  15 வயது சிறுவன் கார் ஏற்றியதில் 2 வயது குழந்தை பலி!  

 

டெல்லி பகார்கஞ்ச்  ராம் நகர் பகுதியில் வசித்து வருபவர்  2 வயது சிறுமி அனாதியா. இச்சிறுமி நேற்று மாலை தனது வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் வசித்து வரும்  15 வயது சிறுவன், தனது தந்தையின் காரை இயக்கிய போது சிறுமி அனாதியா மீது காரை ஏற்றிவிட்டார். கார் டயருக்கு அடியில் சிக்கிய சிறுமி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். 


இதனை கண்டவர்கள் உடனடியாக ஓடி சென்று காரை பின்னுக்கு தள்ளி சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து பாரதிய நியாய சங்கத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், கவனக்குறைவாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்துதல் உட்பட பல  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனையும், அவனின் தந்தையையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று ரம்ஜான் கொண்டாடப்பட்ட நிலையில் சிறுமியின் உயிரிழப்பு பெற்றோருக்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?