undefined

பெரும் சோகம்...  கார் ஏர்பேக் திறந்ததால் 2 வயது குழந்தை மூச்சுத்திணறி பலி!

 
 

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில்  ஏற்பட்ட விபத்தில், 2 வயது பெண் குழந்தை பலியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த போது குழந்தை தாயின் மடியில் அமர்ந்திருந்தது. அப்போது, காரின் ஏர்பேக் திறக்கப்பட்டு இந்த  ஏர்பேக் குழந்தையின் முகத்தை நேரடியாக அழுத்தியது. இதனால்  குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 காரின் எதிர்ப்புறத்தில் வந்து கொண்டிருந்த  டேங்கர் லாரி மீது  மோதியபோது நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரிகிறது. காரில் இருந்த மற்ற நால்வரும், குழந்தையின் தாய் உட்பட சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு  ஆபத்தான காயங்கள் எதுவும் இல்லை என கூறப்பட்டுள்ளது. விபத்தில் ஏர்பேக் திறந்தது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும்,  சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை