9 மணி நேர போராட்டம்.. ஆழ்துளை கிணற்றில் இருந்து 2 வயது குழந்தை பத்திரமாக மீட்பு..!

 

குஜராத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குஜராத் மாநிலம் ஜாம்நகர் அடுத்த கோவானா கிராமத்தை சேர்ந்த இரண்டு வயது சிறுவன் நேற்று மாலை 6 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.

குழந்தை திடீரென திறந்திருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளான். நீண்ட நேரமாக சிறுவன் காணவில்லை என பெற்றோர் பொலீசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, ​​  குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்திருக்கலாம் என உறுதி செய்யப்பட்டது. பின்னர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, ​​குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது தெரிந்தது.

இதையடுத்து மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. ராஜ்கோட்டைச் சேர்ந்த மாநில மீட்புக் குழுவினரும், வதோதராவில் இருந்து தேசிய மீட்புக் குழுவினரும் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் 9 மணி நேர போரட்டத்திற்கு 2 வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டார். தற்போது மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பத்திரமாக மீட்ட அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க