undefined

16 வயது பள்ளி மாணவி கர்ப்பம்... கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது!

 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தெற்கு மயிலோடை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ் (41). கட்டடத் தொழிலாளியான இவர், 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவர் கருவுற்றிருப்பதும் இதற்கு தர்மராஜ்தான் காரணம் என்பதும் தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, தர்மராஜை கைது செய்தனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!