undefined

16 வயசு மகளும், அம்மாவும்...  நடிகர் பிருத்விராஜ் படப்பிடிப்பில் விபரீதம்... பகீர் கிளப்பிய நடிகையின் பேட்டி!

 

ஹேமா கமிட்டியின் அறிக்கை மலையாள திரையுலகில் கடுமையான சர்சைகளையும், சரிவுகளையும், சுனாமியையும் உருவாக்கியுள்ளது. நேற்று மலையாள நடிகர் சங்கத்தின் பதவிகளில் இருந்து நடிகர் மோகன்லால் உட்பட 17 பேரும் கூண்டோடு ராஜினாமா செய்திருக்கிறார்கள். 

இந்நிலையில், நடிகர் பிருத்விராஜின் படப்பிடிப்பு தளத்தில் 16 வயது மகளும், அவரது தாயும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், ஷூட்டிங் நடைபெற்ற 2 வார காலமும் அவர்கள் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2008 ல் வெளியான 'ஒன் வே டிக்கெட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக நடிகை டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.  பிபின் பிரபாகர் இயக்கிய இப்படத்தில் பிருத்விராஜ் மற்றும் பாமா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிகர் மம்முட்டி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

படக்குழுவினர் சிறுமியையும் அவரது தாயாரையும் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள அறையில் தங்க வைத்திருந்தார்கள். அங்கு சுமார் இரண்டு வாரங்கள் அவர்கள் தங்கியிருந்த போதிலும் அவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்துச் செல்லப்படவில்லை. அந்த காலகட்டத்தில், படத்தின் கேமராமேன்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட குழு உறுப்பினர்கள் பலரால் அவர்கள் இருவருமே பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர். 

படக்குழுவினர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தனக்கு நேர்ந்த கொடுமையை தன்னிடம் கூறியதாக நடிகை கூறியிருக்கிறார். நடிகை அளித்த பேட்டியில், படத்தின் இயக்குனர் உட்பட படத்தின் மூத்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இதில் தொடர்பு  இல்லை என்றாலும் படக்குழுவில் மற்றவர்கள் இப்படி நடந்துக் கொண்டனர்  என்று கூறியிருக்கிறார். 

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான உடனேயே, திரையுலகைச் சேர்ந்த பலர் மீது குற்றச்சாட்டுகளும் புகார்களும் எழுந்தன. இயக்குநர்கள் ரஞ்சித், துளசிதாஸ், வி.கே.பிரகாஷ் மற்றும் நடிகர்கள் சித்திக், ரியாஸ் கான், பாபுராஜ், முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, எடவேல பாபு மற்றும் தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்கள் நோபல், விச்சு, விளம்பர இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் ஆகியோர் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

​​​​​​​ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா