16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. இருவர் கைது.. ஒருவருக்கு வலைவீச்சு!
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக மூன்று ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களில் இருவரை காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் வீட்டு பராமரிப்பு பணி செய்து வரும் நபருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
இந்நிலையில், இவரது மகள் தற்போது அருகில் உள்ள தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது தாயார் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக, தாயிடம் கூறியதால், அரசு மருத்துவமனை காவல் நிலைய காவலர்கள், இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் சிறுமியின் தாயார் மீனா விசாரணை நடத்தி மகளிடம் புகார் அளித்தார்.
இப்படியே சிறுகாவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குலசேகரன், ஒலி முகமது பேட்டையைச் சேர்ந்த ரித்தீஷ், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வெங்கட் ஆகியோர் அவ்வப்போது ஆட்டோவில் இச்சிறுமியை வெளியில் அழைத்துச் சென்று பலமுறை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன்பேரில் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் குலசேகரன், ரித்தீஷ் ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான வெங்கட்டை தேடி வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!