undefined

10 வயது காது கேளாத சிறுமியை வீடு புகுந்து நாசம் செய்த கொடூரம்.. 42 வயது நபர் கைது!

 

உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ள கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 10 வயது காது கேளாத சிறுமி மர்ம நபரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் 42 வயதுடைய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுமிக்கு பிறந்ததில் இருந்தே செவித்திறன் குறைபாடு உள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வழக்கம்போல் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, ​​இதையறிந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர், அந்த நபர் தப்பியோடிய நிலையில், பலத்த காயமடைந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 42 வயதான மனோஜ் ரைக்வார் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் சிறுமியை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!