undefined

 நூடுல்ஸ் சாப்பிட்ட 10 வயது சிறுமி பலி... 6 பேர் மருத்துவமனையில் அனுமதி!

 

 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நூடுல்சை விரும்பாதவர்கள் இல்லை. 2 மினிட்ஸ் என்ற கவர்ச்சிகரமான விளம்பரம், டேஸ்டி மேக்கர்ஸ், எளிதான முறையில் சமையல் என பெட்டிக்கடைகள், மருந்தகங்கள் முதல் மால்கள் வரை சரம் சரமாக நூடுல்ஸ்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. உத்தரபிரதேச மாநிலத்தில் பிலிபிட்டில் மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

அத்துடன் நூடுல்ஸ் சாப்பிட்ட குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மேகி சாப்பிட்டதால் நோய்வாய்ப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  குடும்பத்தினர் அனைவரும் மேகி சாப்பிட்டதாகவும் அனைவருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டதாகவும் அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.  


இதனையடுத்து  உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  மேகி சாப்பிட்ட பிறகு, குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. ஆனால் சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததால், சிஎச்சி புரான்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சைக்கு பின் அனைவரும் குணமடைந்தனர்.  10 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!