undefined

புலி அடித்து  10 வயது  சிறுவன் பலி!! கதறித் துடித்த தாய்!!

 

கர்நாடகா மாநிலம் நாகர்கோலியில்  புலிகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கிருக்கும்  வனப்பகுதியில் தொழிலாளர்கள் பணிபுரிந்து  வருகின்றனர். அங்கு பணிபுரியும் பெண் தொழிலாளி தனது 10 வயது மகனையும் அழைத்து வந்துள்ளார். மகனை ஓரிடத்தில் பத்திரமாக இருக்க சொல்லி விட்டு தன் பணிகளை தொடர்ந்தார்.  தாயார் வேலை செய்து கொண்டிருந்த போது   சிறுவன் அருகில் உள்ள மரத்தடியில் ஓய்வெடுத்து கொண்டிருந்தான்.

அப்போது திடீரென  அந்த வழியே வந்த புலி ஒன்று  சிறுவனை கடித்து வனப்பகுதிக்குள் அந்த புலி இழுத்து சென்றுவிட்டது. சிறிது நேரம் கழித்து மகனை காணவில்லை என தாய் தேடத்தொடங்கினாள். ஆனால் எங்கும் காணாததால் தாய் பதட்டமும் அதிர்ச்சியும் அடைந்தார்.  அங்கிருந்த காட்டுப்பகுதிக்குள் மகன் உயிரிழந்து கிடப்பதை பார்த்து தாயார் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

இது குறித்து தகவலறிந்து, வனத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.  சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 10 வயது சிறுவனை வனப்பகுதிக்குள் இழுத்து சென்று கொன்ற புலியைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சிகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை