undefined

தமிழக தொழிலாளர்கள் மீது வடஇந்தியர்கள் தாக்குதல்.. பெரும் பரபரப்பு !!

 

திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றனர். இந்த சூழலில் திருப்பூர் மாவட்ட மக்கள் மட்டுமல்லாது வட இந்தியாவை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வந்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை விடவும் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தான் அதிகமாக வேலை பார்த்து வருகின்றனர்.

வட இந்திய தொழிலாளர்கள் மற்றும் தமிழ் தொழிலாளர்கள் இடையே அவ்வப்போது சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் அனுப்பர்பாளையம் - வேலம்பாளையம்   செல்லும் சாலையில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்க்கும்  வட மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமிழ்நாட்டு தொழிலாளர்களை பெல்ட், கட்டை,  உள்ளிட்டவைகளை கொண்டு தாக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலம்பாளையம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விசாரணையில், பின்னலாடை நிறுவனத்திற்கு அருகே உள்ள பெட்டிகடையில், சிகரெட் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்னையில், தமிழ் தொழிலாளர்கள் வடமாநில தொழிலாளரை தாக்கியுள்ளனர்.  இதனால் பதில் தாக்குதல் நடத்திய  வட மாநில தொழிலாளர்கள் பெல்ட், உருட்டு கட்டை போன்ற ஆயுதங்களுடன் தமிழ்நாட்டு தொழிலார்களை தாக்கியுள்ளனர்.  

தொடர்ந்து இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிகொண்டதில் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.